'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன்
ADDED : 1720 days ago
'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து இயக்கி உள்ள படம் 'கர்ணன்'. தனுஷ் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகையான ரெஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, லால் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இதனிடையே, இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படம் பற்றி ஒரு அப்டேட்டைக் கொடுத்திருக்கிறார். “கர்ணன், பார்த்தேன், திகைத்துப் போனேன். உங்களைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் தனுஷ். இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் தாணு மற்றும் சிறப்பான குழுவினர். கர்ணன், அனைத்தும் கொடுப்பான்” எனப் பாராட்டியுள்ளார்.
தனுஷ் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' படம் வெளிவந்ததும், 'கர்ணன்' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.