உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி

அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ்குமார் மலையாளத்தில் பிரபலமான ஒரு தயாரிப்பாளர். சிறு வயதில் தன் அப்பா தயாரித்த சில படங்களில் கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்திலும், தனது அப்பாவின் தயாரிப்பிலும் 'வாஷி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

அது பற்றி கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ளதாவது, “நீங்கள் நினைப்பதைவிட என் மனதிற்கு நெருக்கமான ஒரு படம். ஒரு பெண் குழந்தையாக, அப்பாவின் தயாரிப்பில் நடிப்பது சுலபம் என நினைத்துவிடலாம், ஆனால் எதுவும் சுலபமாக வருவதில்லை.

எனது சிறு வயது நண்பர் விஷ்ணு ராகவ் இந்த முறை என்னுடன் எனது இயக்குனராகப் பணிபுரிகிறார். எனது அபிமான மற்றும் சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி,” என கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழில் 'அண்ணாத்த, சாணிக் காயிதம்' படத்திலும், தெலுங்கில் 'ரங் தே, சரக்கு வாரி பாட்டா, அய்னா இஷ்டம் நுவ்வு' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 'குட் லக் சகி' தெலுங்குப் படத்திலும், 'மரைக்கார்' மலையாளப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !