மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1707 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1707 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1707 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1707 days ago
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ஆச்சார்யா. கொரட்டால சிவா இயக்கியுள்ள இந்தப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம்சரண் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார் என்பதுடன் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் தான் இந்தப்படத்தில் நடிப்பது கெஸ்ட் ரோலில் அல்ல, என தனது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ராம்சரண்.
சமீபத்தில் இந்தப்படத்தில் ராம்சரணின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இந்தப்படத்தில் நடித்தது குறித்து ராம்சரண் கூறும்போது, “என் தந்தையுடன் இணைந்து நடிப்பது உண்மையிலேயே எனக்கு மிகப்பெரிய கவுரவம் தான்.. ஆனால் இந்தப்படத்தில் நான் நடிப்பது கெஸ்ட் ரோலில் அல்ல.. படம் முழுவதும் வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளேன் நானும் என் தந்தையும் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் தாயின் கனவாக இருந்தது.. அதிர்ஷ்டவசமாக ஆச்சார்யா படத்தில் நான் நடிக்கும் விதமான கதாபாத்திரம் இருந்ததால் இந்தப்படத்தில் நடித்து என் தாயின் கனவை நிறைவேற்றி விட்டேன்” என கூறியுள்ளார்
1707 days ago
1707 days ago
1707 days ago
1707 days ago