உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆர்ஆர்ஆர் கதாநாயகி பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

ஆர்ஆர்ஆர் கதாநாயகி பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிவரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். ஆங்கிலேயர் கால பின்னணியில் சுதந்திரப் போராட்ட களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இருவரும் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் லண்டனைச் சேர்ந்த ஒலிவியா மோரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், அதை தொடர்ந்து ஹீரோக்களின் போஸ்டர், ஆகியவை சமீபத்தில் வெளியாகின. அதுமட்டுமல்ல, இந்தப்படம் வரும் அக்-13ஆம் தேதி ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் படத்தின் கதாநாயகியான ஒலிவியா மோரிஸின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இவர் நடித்த, '7 ட்ரையல் 7 டேய்ஸ்' என்கிற தொடரில் இவரது நடிப்பை கண்டு வியந்து போய், அதன்பிறகே இவரை இந்த படத்தில் ராஜமௌலி கதாநாயகியாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !