மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை
மலையாள திரையுலகில் பிரபல கதாசிரியரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு பிறகு நான்காவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்கிறார் மம்முட்டி. இந்த படத்திற்கு படை யாத்ரா என டைட்டில் வைக்கப்பட்டு துவக்க விழா பூஜையும் நேற்று நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பே அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது கதாநாயகியாக நடிகை கிரேஸ் ஆண்டனி நடிக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. படத்தின் துவக்க விழா பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான ரோஷாக் திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் கிரேஸ் ஆண்டனி. கடந்த வருடம் தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ படத்தில் கதாநாயகியாக நடித்து தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் இந்த கிரேஸ் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.