துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2'
சன்னி தியோல், வருண் தவான் நடிப்பில் உருவான பார்டர் 2 திரைப்படம் நேற்று வெளியானது. அனுராக் சிங் இயக்கத்தில் ராணுவ பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று வெளியான முதல் நாளே இந்திய அளவில் 32 கோடி வசூலித்து உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் முதல் நாளன்று இந்தியாவில் 28 கோடி வசூலித்து இருந்தது. அதை பார்டர் 2 முறியடித்துள்ளது.
அதே சமயம் துரந்தர் படத்திற்கான வசூல் அடுத்தடுத்த நாட்களில் கூடவே செய்தது. அதனால் கிட்டத்தட்ட 1300 கோடி வசூலித்து தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுபோன்ற ஒரு சாதனையை பார்டர் 2 செய்யுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதே சமயம் கடந்த 2023 ல் வெளியான கடார் படத்தை தொடர்ந்து சன்னி தியோலுக்கு இந்தப் படமும் ஒரு மாபெரும் வசூல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.