கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல்
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் 2024ம் ஆண்டில் திரைக்கு வந்த படம் கல்கி 2898 ஏடி. இந்த படம் 1000 கோடி வசூலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் கல்கி 2 படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛கல்கி 2 எனது சிறந்த படைப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் நிறைய முயற்சி செய்கிறோம். கல்கி 2898 ஏடி எங்கள் அனைவருக்கும் ஒரு மெகா கற்றல் படமாக இருந்தது. இந்நிலையில் கல்கி 2 படத்தின் வேலைகளை தற்போது தொடங்கிவிட்டோம். இந்த படத்தில் நடிக்கும் அனைவரும் மெகா நடிகர்களாக இருப்பதால் அவர்களின் கால்சீட்டுக்காக காத்திருக்கும் இயக்குனர் பிப்ரவரியில் இருந்து படப்பிடிப்பை தொடங்குகிறார்'' என்று தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
பிரபாஸ் நாயகனாக நடித்த கல்கி படத்தில் கமலஹாசன் வில்லனாகவும், அமிதாப்பச்சன் முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் முதல் பாகத்தில் நடித்த அதே கதாபாத்திரங்களை இரண்டாம் பாகத்திலும் அவர்கள் தொடரப்போகிறார்கள். இந்த படத்தை வைஜெயந்தி பிலிம்ஸ் தயாரிக்கிறது.