உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி!

ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி!

1978ல் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் அறிமுகமானவர் வடிவுக்கரசி. அதையடுத்து 1979ம் ஆண்டில் ராஜேஷ் நாயகனாக நடித்த கன்னிப் பருவத்திலே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த வடிவுக்கரசி, ஒரு கட்டத்தில் கேரக்டர் நடிகையாகிவிட்டார். சமீபத்தில் திரைக்கு வந்த தக் லைப், இட்லி கடை, வா வாத்தியார் போன்ற படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார் வடிவுக்கரசி. தற்போது க்ராணி என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். விஜயகுமாரன் இயக்கியுள்ள இதில் வடிவுக்கரசியுடன் சிங்கம் புலி, திலீபன், ஜீ.வி.அபர்ணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஹாரர் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இப்படம் வருகிற ஜனவரி 30ம் தேதி திரைக்கு வருவதாக படக்குழு ஒரு போஸ்டர் மூலம் அறிவித்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !