கோடையில் ரிலீஸிற்கு தயாராகும் ‛ஒன்ஸ்மோர்'
ADDED : 1 days ago
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'ஒன்ஸ் மோர்'. இதற்கு ஹேசம் அப்துல் வாகப் இசையமைத்துள்ளார். குட் நைட், லவ்வர், டூரிஸ்ட் பேமிலி போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்துள்ளனர். காதல் கதையில் உருவாகி உள்ள இப்படம் நிறைவு பெற்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. ஆனால், இந்த படத்தை சுற்றி பல பிரச்னைகள் நிலவி இருந்தது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருந்தனர். தற்போது அந்த பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளது. இதனால் ஒன்ஸ்மோர் படம் இவ்வருட சம்மருக்கு திரைக்கு வருகிறது என குறிப்பிட்டு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர் .