அண்ணன் ஆக பார்த்தேன்... : மாஸ்டர் மகேந்திரன் வேதனை
நடிகர் மகேந்திரன் மூன்று வயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக ஆறு மொழிகளில் நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வளர்ந்த பிறகு ஒரு சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவை அல்லாமல் மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் . சமீபத்தில் மாஸ்டர் மகேந்திரன் ஒரு பேட்டியில் வேதனையுடன் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் நான் அண்ணன் ஆக பார்த்த இயக்குனர் ஒருவர் இப்படி பண்ணுவாருனு கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்லை. ஒரு பெரிய இயக்குனர் அவர் எனக்கு ரொம்ப நெருக்கம், அவர் மூன்று மொழிகளில் படங்களை இயக்கியவர். அவர் கிட்ட ஒருமுறை வாய்ப்பு கேட்க சென்றபோது அண்ணனை பாக்கணும்னு என கூறினேன் , சார் மீட்டிங்கில் உள்ளார் வெயிட் பண்ணுங்கள் என்றார்கள், காலையில் இருந்து மதியம் வர வெயிட் பண்ண வெச்சாங்க, சார் மதியம் சாப்பிட்டு முடிச்சிட்டு தூங்குவாரு நீங்க மாலை நேரத்தில் வாங்க என்றார்கள். மாலை நேரத்தில் சென்றேன் இரவு 8 மணி வரை காத்திருக்க வைத்தார்கள் . அப்புறம் சார் வந்தார், மகேந்திரன் நீங்க எப்போ வந்தீர்கள் என கேட்டார், அவருக்கு தெரியும் நான் காலையில் இருந்து வெயிட் பண்ணுறேன் தெரியும். ஆனாலும், தெரியாத மாதிரியே கேட்டார் என தெரிவித்துள்ளார்.