கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது
பொதுவாக பட்ஜெட் மற்றும் கால அளவு உள்ளிட்ட காரணங்களால் திரைப்படங்களாக எடுக்க முடியாத கதைகளை சமீபகாலமாக விறுவிறுப்பான வெப் சீரிஸ்களாக வெளியிட்டு வருகிறார்கள். ஒருவெப் சீரிஸ் ஹிட் அடித்ததும் அதன் அடுத்தடுத்த பாகங்கள் கூட வெளியாகி வருகின்றன. அதேசமயம் அப்படி நடிகை வர்ஷா பொல்லம்மா கதையின் நாயகியாக டைட்டில் ரோலில் நடித்த கான்ஸ்டபிள் கனகம் என்கிற வெப் சீரிஸ் முதல் சீசன் கடந்த ஆகஸ்ட் மாதமும், இரண்டாவது சீசன் கடந்த ஜனவரி எட்டாம் தேதியும் அடுத்தடுத்து வெளியாகின.
இந்த நிலையில் ஆச்சரியமாக இதன் மூன்றாவது சீசனை வெப் சீரிஸ் ஆக வெளியிடாமல் திரையரங்குகளில் வெளியிடும் திரைப்படமாகவே உருவாக்கி வருகின்றனர் படக்குழுவினர். மிஸ்டரி திரில்லர் ஆக கடந்த இரண்டு சீசன்களையும் விறுவிறுப்பாக இயக்கிய பிரசாந்த் குமார் டிம்மலா இந்த மூன்றாவது சீசனை திரைப்படமாகவும் அதே விறுவிறுப்புடன் கொடுக்க தயாராகி வருகிறார்.