குடும்பக் கதையில் நடிக்கும் அனுஷ்கா
ADDED : 1719 days ago
அனுஷ்கா நடித்த நிசப்தம் படம், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அமேசான் பிரைமில் வெளியான நிலையில் அடுத்து அவரைத்தேடி சகுந்தலம் உள்பட சில பட வாய்ப்புகள் சென்றன. ஆனால் அவற்றை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது யுவி கிரியேசன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அனுஷ்கா. ரமேஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இப்படம் குடும்பப் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. இந்த படத்தில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடிக்கிறார். தற்போது 39 வயதாகும் அனுஷ்கா, கிட்டத்தட்ட அதே வயது கொண்ட ஒரு பெண் நிஜ வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளை உள்ளடக்கிய கதையில்தான் நடிக்கிறாராம். இப்படம் தெலுங்கு, தமிழில் தயாராகிறது.