சலார் படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன்
ADDED : 1719 days ago
'கிராக்' படத்திற்கு பின் பவன் கல்யாண் உடன் 'வக்கீல் சாப்' படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இப்படம் கோடையில் திரைக்கு வர உள்ளது. அடுத்து, பிரபாசுடன் நடிக்கும் 'சலார்' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன். இப்படத்தின் படப்பிடிப்பை இரண்டு மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல். தற்போது தெலுங்கானாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். ஏற்கனவே பிரபாஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வரும் நிலையில், தற்போது ஸ்ருதிஹாசனும் இன்று முதல் இணைந்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் முதல்நாள் படப்பிடிப்பை முடித்த பின் ஒரு செல்பி போட்டோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி. முதன்முறையாக இப்படம் மூலம் பிரபாஸ் - ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கின்றனர்.