4 மொழிகளில் சக்ரா!
ADDED : 1720 days ago
எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து, தயாரித்துள்ள படம் சக்ரா. விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இம்மாதம் 19ம் தேதி இப்படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில் சக்ரா படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ள விஷால், கூடவே, 'சக்ரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் பிப்ரவரி 19ஆம் தேதி ரிலீஸாகும்' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே ஹிட்டான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.