ஹரி படத்தில் மீண்டும் ராதிகா
ADDED : 1720 days ago
இயக்குனர் ஹரி முதன்முறையாக தனது மைத்துனரான அருண் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். அருண் விஜய்யின் 33வது படமாக உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்தநிலையில் இந்தப்படத்தில் நடிகை ராதிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்கிற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் ஹரி இயக்கிய பூஜை படத்தில் நடித்திருந்த ராதிகா மீண்டும் அவரது கூட்டணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.