உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா

'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா


மலையாளத்தில் கடந்த டிசம்பர் மாதம் நிவின்பாலி கதாநாயகனாக நடித்த 'சர்வம் மாயா' என்கிற திரைப்படம் வெளியானது. பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் இந்த படத்தை இயக்கியிருந்தார். கதாநாயகியாக புதுமுகம் ரியா ஷிபு நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்தது. கதாநாயகியாக நடித்த ரியா ஷிபுவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி உள்ளார்.

இந்த படத்தை ரிலீஸ் ஆன சமயத்திலேயே பார்த்து ரசித்த நடிகை ராதிகா அப்போதே அனைவரின் நடிப்பையும் பாராட்டி சோசியல் மீடியாவில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் அகில் சத்யனை நேரில் சந்தித்தார் ராதிகா. அப்போது படம் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்ததுடன் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார் ராதிகா.

மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இயக்குனர் அகில் சத்யன் தன்னுடைய திரை உலக பயணத்தில் இன்னும் அதிக சக்தியை பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். அவருடைய அடுத்த படத்திற்காக நான் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !