மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
1680 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
1680 days ago
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம்
1680 days ago
படம் : ஜெயம்
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : ரவி, சதா, கோபிசந்த்
இயக்கம் : எம்.ராஜா
தயாரிப்பு : எடிட்டர் மோகன்
கடந்த, 2002ல், தேஜா இயக்கத்தில், தெலுங்கில் வெற்றி பெற்ற ஜெயம் படத்தை, தமிழில், அப்பா மோகன் தயாரிக்க, அண்ணன் ராஜா இயக்க, தம்பி ரவி நடிக்க, குடும்பப் படமாக, அதே தலைப்பில், 2003ல் வெளியானது. இப்படத்தின் மூலம் இயக்குனராக எம்.ராஜா, நடிகர்கள் ரவி, கோபி சந்த், நடிகை சதா ஆகியோர் தமிழில் அறிமுகமாகினர்.
கல்லுாரியில் பயிலும் ரவிக்கும், சதாவிற்கும் காதல் மலர்கிறது. இந்நிலையில் சதாவிற்கும், கோபிசந்திற்கும் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. திருமணத்திற்கு முன், சதாவை அழைத்து சென்றுவிடுவதாக ரவி சவால்விடுகிறார். அடியாட்கள் சூழ்ந்திருக்கும் நிலையிலும் சாமர்த்தியமாக சதாவை, ரவி அழைத்து செல்கிறார். இறுதியில் கோபிசந்த் - ரவி இடையே நடக்கும் சண்டையில், ரவி வெற்றி பெறுகிறார். மிக சாதாரண கதை என்றாலும், திரைக்கதையில் 'மேஜிக்' நிகழ்த்தியிருந்தனர்.
முருகனின் வேல், ரயில், ஓட்டை பிரித்து இறங்குவது என பல காட்சிகள், ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. இப்படத்தின் வெற்றிக்கு பின் கதாநாயகன் ரவி, ஜெயம் ரவி என்றழைக்கப்படுகிறார். சதா பேசும், 'போயா போ...' என்ற டயலாக், வெகு பிரபலமானது. ராஜிவ், நிழல்கள் ரவி, நளினி, செந்தில், சுமன் செட்டி, ரமேஷ் கண்ணா ஆகியோர், தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியிருந்தனர்.
தெலுங்கில் பயன்படுத்திய அதே டியூன்களை, ஆர்.பி.பட்நாயக் தமிழிலும் பயன்படுத்தினார். அதை அறிவுமதி, பழனிபாரதி, நா.முத்துகுமார், நந்தலாலா, தாமரை ஆகியோர் அழகான தமிழ் சொற்களால் நிரப்பியிருந்தனர். 'கோடி கோடி மின்னல்கள், திருவிழான்னு வந்தா, கவிதையே தெரியுமா...' பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.
எளிமை, ஜெயம் தரும்!
1680 days ago
1680 days ago
1680 days ago