உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நதியா

குருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நதியா

நடிகை நதியா திரையுலகில் நுழைந்து 37 வருடங்கள் ஆகின்றன. இவரை மலையாளத்தில், “நோக்கத்தே கண்ணெட்டும் தூரத்து' என்கிற படம் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாசில். அந்தப்படத்தை தமிழில் 'பூவே பூச்சூடவா' என ரீமேக் செய்தபோதும் நதியாவே நடித்தார். இந்த இரண்டு படங்களை தொடர்ந்து நதியாவின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது. நேற்று தனது குருவான பாசிலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் நதியா.

தனது சோஷியல் மீடியா பக்கத்தில், பூவே பூச்சூடவா படத்தில் பணிபுரிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள நதியா இதுகுறித்து கூறும்போது, “இயக்குனர் பாசில் என்னைப் பொறுத்தவரை எப்போதுமே பாசில் அங்கிள் தான்.. மிகப்பெரிய பொழுதுபோக்கு உலகத்திற்குள் நுழையும் விதமாக என் கண்களை திறந்து விட்டவர். 17 வயதில் சாதாரண ஜரீனாவாக இருந்த என்னை நதியாவாக மாற்றினார்.. அவரது இயக்கமும் வழிகாட்டுதலும் தான் ரசிகர்கள் மனதில் பதியும் விதமான கதாபாத்திரங்களை எனக்கு கிடைக்க செய்தது” என நெகிழ்வுடன் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !