உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாள நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் திறப்பு

மலையாள நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் திறப்பு

அம்மா என அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்திற்கு நேற்று கொச்சியில் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. மோகன்லால்-மம்முட்டி இருவரும் இணைந்து இந்த கட்டிடத்தை திறந்து வைத்தனர். மற்ற முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கடந்த சில வருடங்களில் இரண்டுக்கும் மேற்பய்ட்ட முறை நடிகர் சங்கத்துக்கான அலுவலகத்தை வெவ்வேறு இடங்களில் மாற்றி வந்தனர்..

தற்போது பத்துகோடி ரூபாய் செலவில் நான்கு தளங்களை கொண்ட புதிய கட்டடத்தை கட்டியுள்ளனர். இந்த கட்டடத்தில் 150 பேர் அமர்ந்து பார்க்கும் விதமான சிறிய தியேட்டர், கதாசிரியர்கள், இயக்குனர்களுக்கான தனித்தனி டிஸ்கஷன் ரூம் மற்றும் நடிகர்கள் கதை கேட்பதற்கான தனிதனி அறைகள் என சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளனவாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !