உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் அறிவிப்பு : குழுவினர் மகிழ்ச்சி

நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் அறிவிப்பு : குழுவினர் மகிழ்ச்சி

செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.

இப்படம் முடிவடைந்து சில வருடங்கள் ஆகியும், சில காரணங்களால் வெளியாகாமலேயே இருந்தது. படத்தை வெளியிடும் முயற்சியில் அதன் தயாரிப்பாளர்கள் கடந்த வருடக் கடைசியில் இருந்து தீவிரமாக இறங்கினர்.

தற்போது அதற்கு விடிவு காலம் கிடைத்துவிட்டது. மார்ச் 5ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

“உங்கள் பொறுமைக்கு நன்றி” என செல்வராகவன் இது குறித்து டுவீட் செய்துள்ளார்.

“கடவுள் இந்தப் படத்திற்காக சரியான திட்டம் ஒன்றை வைத்திருப்பார் என்பதை நம்பினேன். கடவுளுக்கு, எனது அம்மாவுக்கு, அப்பாவுக்கு, நன்றி. செல்வராகவன் சார், யுவன் ஆகியோரது ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி,” என எஸ்ஜே சூர்யா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட தாமதத்திற்கப் பிறகு இப்படம் வெளிவந்தாலும் செல்வராகவன், யுவன் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !