4 ஹீரோயின்கள் நடிக்கும் அந்தாலஜி படம்
ADDED : 1710 days ago
இப்போது அந்தாலஜி படங்களின் சீசன். சில்லுக்கருப்பட்டி, புத்தம்புது காலை, பாவக் கதைகள் படங்கள் வெளிவந்திருக்கிறது. இன்று குட்டி ஸ்டோரி என்ற அந்தாலஜி படம் வெளியாகி உள்ளது. இதுதவிர பா.ரஞ்சித் தயாரிப்பில், மணிரத்னம் தயாரிப்பில் அந்தாலஜி படங்கள் உருவாகி வருகிறது.
அந்த வரிசையில் உருவாகி வரும் மற்றொரு படம் “ஷிஷிபிபிபி”. இந்த படத்தில் இடம்பெறும் கதைகள் காமத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறதாம். அதாவது அடல்ட் கண்டன்ட் கதை என்றும் கூறலாம். நான்கு வெவ்வேறு வயது நிலைகளில், வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் காம உணர்வுகளை பேசுகிறதாம்.
கார்த்திகேயன், பிருத்வி ஆதித்யா , வாலி மோகன் தாஸ் ஹரீஷ் இயக்குகின்றனர். ஸ்ரீகாந்த், இனியா, சோனியா அகர்வால், ஐஷ்வர்யா தத்தா, க்ரிஷா க்ரூப், மாறன் மற்றும் மைம் கோபி நடித்துள்ளனர்.