ராம் சரணை இயக்கும் ஷங்கர்
ADDED : 1697 days ago
கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார் ஷங்கர். படம் துவங்கியதிலிருந்து பல பிரச்னை. கடைசியாக படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியான சம்பவத்தோடு நின்ற படப்பிடிப்பு மீண்டும் துவங்கவில்லை. கமல் அடுத்து தேர்தலில் பிஸியாக உள்ளார். அதனால் இப்போதைக்கு இந்தப்படம் துவங்க வாய்ப்பில்லை. இதனால் ஷங்கர் அடுத்தப்பட வேலையில் இறங்கினார். ஏற்கனவே ராம் சரண், பவன் கல்யாணை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக செய்தி வெளியான நிலையில் இப்போது நடிகர் ராம் சரண் தேஜாவை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் -2 படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்து பின் வாங்கிய தில்ராஜூவே இப்படத்தை தயாரிக்கிறார்.