சைபர் கிரைமில் நடிகை புகார்
ADDED : 1697 days ago
ரோஜா, பாசமலர், பூவே பூச்சூடவா உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஷாமிலி சுகுமார். இவரது பெயரில் மர்மநபர் ஒருவர் போலியான இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதில், ஷாமிலி பற்றி அவதூறான கருத்துக்களும், இளைஞர் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் பகிரப்பட்டுள்ளன.
இது பற்றி ஷாமிலியின் கவனத்திற்கு சென்றதைத் தொடர்ந்து, தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அதில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வருபவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார்.
ஷாமிலியின் இந்த புகாரை அடுத்து சென்னை மாநகர காவல் துறை அலுவலகத்தில் உள்ள சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் .