'சாமுராய்' அனிதாவிற்கு ஆண் குழந்தை
ADDED : 1697 days ago
வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்ரன் போன்ற படங்களில் நடித்தவர் அனிதா ஹசானந்தானி. தென்னிந்திய மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர் அதன்பின் ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார். 2013ல் ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்தார். சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். தொடர்ந்து கர்ப்பகாலத்தில் எடுத்த பல போட்டோக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்தார். இப்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் இருக்கும் போட்டோவை சமூகவலைதளத்தில் அனிதா பகிர்ந்துள்ளார்.