மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1666 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1666 days ago
தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு கேரக்டரில் நடித்தவர் மீரா மிதுன். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர், சமூகவலைதளத்தில் கவர்ச்சியாக போட்டோக்களை பதிவிட்டும், திரைப்பிரபலங்களை தாறுமாறாக விமர்சித்தும் வந்தார். இதனால் பலரும் அவரை வசை பாடி வந்தனர். இந்நிலையில் தான் தற்கொலை செய்ய இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டு, அதை பிரதமர் மோடிக்கு டேக் செய்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில், ''நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். தற்கொலை செய்யலாம் என தோன்றுகிறது. என் மன உளைச்சல் அனைத்தையும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதால் மனம் நிம்மதி இன்றி உள்ளது. நான் இறந்துவிட்டால் என் மரணத்திற்கு காரணமானவர்களை தூக்கிலிடுங்கள் என பதிவிட்டு பிரதமருக்கு டேக் செய்துள்ளார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக இது மாதிரியான தொல்லையை நான் சந்தித்து வருகிறேன், தயவு செய்து இதை தடுத்து நிறுத்துங்கள்'' என பதிவிட்டு கண்ணீர் மல்க வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மீரா.
1666 days ago
1666 days ago