தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்!
ADDED : 1695 days ago
தனுசுடன் பட்டாஸ் என்ற படத்தில் நடித்தவர் மெஹ்ரின் பிர்ஷடா. அதற்கு முன்பே நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா போன்ற படங்களிலும் நடித்துள்ள இவர் ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாமி மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது ஜெய்ப்பூர் மாநில காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன் பாவ்யா பிஷ்னோவ் என்பவருக்கும் மெஹ்ரீன் பிர்ஷடாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பாவ்யா பிஷ்னோவின் தாத்தா பஜன்லால் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் காலத்தில் மூன்று முறை முதல் வராக இருந்தவர்.
இந்நிலையில், மார்ச் 12-ந்தேதி ஜெய்ப்பூரில் மெஹரீன் பிர்ஷடா- பாவ்யா பிஷ்னோவ் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது திருமண தேதியும் அறிவிக்கப்பட உள்ளதாம். இந்த தகவலை மெஹ்ரீனும் ஒரு பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்காரணமாக தற் போது கைவசமுள்ள படங்களில் வேகமாக நடித்து கொடுக்கவும்தான் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.