மேலும் செய்திகள்
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1664 days ago
சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா
1664 days ago
கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த்
1664 days ago
பிரசாத் ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்த பின்னர் சென்னை தி நகரில் சொந்தமாக இளையராஜா ஸ்டுடியோ என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை இளையராஜா தி நகர் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அவருடன் பல விஷயங்கள் பேசியிருக்கிறார். பின்னர் இளையராஜா சொந்த ஸ்டூடியோ கட்டியிருப்பதை கேள்விப்பட்டு அந்த ஸ்டூடியோவுக்கு இளையராஜாவுடன் சென்று இருக்கிறார் ரஜினிகாந்த். ஸ்டூடியோவை சுற்றி பார்த்து, வியந்து, கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார். பின்னர் இசைஞானியுடன் நீண்ட நேரம் பல விஷயங்கள் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் இன்றும் 2வது முறையாக இளையராஜா ஸ்டூடியோவுக்கு மீண்டும் வ ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். சமீபகாலமாக பொது நிகழ்ச்சி, விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் ரஜினியின் இந்த வருகை பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1664 days ago
1664 days ago
1664 days ago