25 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் மலையாளத்தில் அரவிந்த்சாமி
தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவர் அரவிந்த்சாமி. சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும்போதே அதிலிருந்து விலகி வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வந்தார். ஆனாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.
அதன்பிறகு தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தார். கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இவைகள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் ஒட்டு என்ற மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் குஞ்சகோ போபன் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். தீ வண்டி படத்தின் இயக்குநர் டி.பி.பெலினி இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு சஜீவ் கதை எழுதியுள்ளார். ஹாசிப் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் தயாரிக்கவுள்ளது.
அரவிந்த்சாமி 1992ம் ஆண்டு டாடி என்ற மலையாளப் படத்திலும், 25 ஆண்டுகளுக்கு முன்பு பரதன் இயக்கிய தேவராகம் படத்திலும் நடித்திருக்கிறார். அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார்.