உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இதுதான் காரணமாம்!

இதுதான் காரணமாம்!

ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப். இந்தியில் லால் சிங் சட்டா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. அமீர் கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்கிறார். இந்தப் படத்தில் அமீர் கானுக்கு நண்பராக விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டார்.

உடல் எடையைக் குறைக்க முடியாததால் தான் விஜய் சேதுபதி, லால் சிங் கட்டா படத்தில் இருந்து வெளியேறியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலானது. ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதனை மறுத்துள்ள விஜய் சேதுபதி, 'தேதிகள் ஒதுக்க முடியாமல் போனதால் தான் அப்படத்தில் இருந்து விலகியதாகத் தெரிவித்துள்ளார்.

“கொரோனா லாக்டவுன் காரணமாக அப்படத்தில் நடிக்க முடியாமல் போனது. லாக்டவுனுக்கு பின் ஐந்து தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே அமீர் கான் படத்திற்கான தேதிகளை ஒதுக்க முடியாமல் போனது. இருப்பினும் விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது” என அப்பேட்டியில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !