புதுமுகங்களின் உதிர்
ADDED : 1705 days ago
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் படம் உதிர். விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா, மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம்புலி, போண்டா மணி, தீப்பெட்டி கணேஷன், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் ஸ்ரீராம், ஈஸ்வர் ஆனந்த் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ஆரோக்கியராஜா கூறியதாவது : என்ன தான் நாகரீகம் வளர்ந்தாலும் இந்த சமூகம் ஊனமுற்றவர்களை தொடர்ந்து புறக்கணிக்கிறது. தன் மகன் ஊனமுற்ற பெண்ணை காதலித்தான் என்பதற்காக அவனை பெற்றவர்களே ஒதுக்குகிறார்கள். காதலித்தவளை கைவிடக்கூடாது என்பதற்காக அவளை அழைத்துக் கொண்டு வெளியூருக்கு சென்று வாழ்கிறான். சமூகம் அவனை புறக்கணிக்கிறது. வறுமை துரத்துகிறது. அப்போது அவன் ஒரு முடிவெடுக்கிறான். அது என்ன என்பதுதான் கதை. என்கிறார்.