மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1685 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1685 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1685 days ago
சுதா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடித்த 'சூரரைப் போற்று' படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 12ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. பொதுவாக தியேட்டர்களில் வெளியாகும் படங்களுக்கு மட்டும் தான் 100 நாள் கொண்டாட்டம் எல்லாம் நடத்துவார்கள். ஆனால், ஓடிடியில் வெளியான இந்தப் படத்திற்கு சமூக வலைத்தளங்களில் 100வது நாள் என போஸ்டரை வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் இதுவரையில் வெளிவந்த மாநில மொழிப் படங்களில் 'சூரரைப் போற்று' படம்தான் அதிக முறை பார்க்கப்பட்ட படம் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தான் ஓடிடி தளங்களில் வெளியான படங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தியேட்டர்காரர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதற்கான பிரச்சினை சூர்யா குடும்பத்தினரின் அடுத்த தியேட்டர் வெளியீட்டீல் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1685 days ago
1685 days ago
1685 days ago