உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்திய வீரர்களுக்கும் 'வாத்தி கம்மிங்'கை பரப்பும் அஷ்வின்

இந்திய வீரர்களுக்கும் 'வாத்தி கம்மிங்'கை பரப்பும் அஷ்வின்

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மாஸ்டர்' படப்பாடல்கள் ஹிட்டாக அமைந்தன. குறிப்பாக 'வாத்தி கம்மிங்' பாடல் சூப்பர் ஹிட் ஆகியது.

இந்தப் பாடலுக்கு சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது அஷ்வின் தோள்களைக் குலுக்கி நடனமாடியது வைரலானது. ஏற்கெனவே இப்பாடல் பற்றியும் தனது டுவிட்டர் தளத்தில் பாராட்டியவர் அஷ்வின்.

இந்நிலையில் 'வாத்தி நிச்சயம் மகிழ்வார்” எனக் குறிப்பிட்டு இந்திய அணியின் மற்ற கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருடன் இப்பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை அஷ்வின் பதிவிட்டுள்ளார்.

தற்போது அடுத்த டெஸ்ட் போட்டிக்காக அகமதாபாத்தில் இந்திய வீரர்கள் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது எடுத்த வீடியோ அது. 5 லட்சத்திற்கும் மேல் அந்த வீடியோ லைக்குகளைப் பெற்றுவிட்டது.

இந்திய அணியின் மற்ற வீரர்களுக்கும் 'வாத்தி கம்மிங்'கை வைரலாக்கி வருகிறார் அஷ்வின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !