தேசிய விருது பெற்ற மலையாள இசை அமைப்பாளர் ஐசக் தாமஸ் மரணம்
ADDED : 1686 days ago
பழம்பெரும் மலையாள திரைப்பட இசை அமைப்பாளர் ஐசக் தாமஸ் கொடுக்காப்பள்ளி. ஏராளமான மலையாள படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் இசை அமைத்த ஆதாமின்ட மகன் அபு படத்திற்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றார். இதுதவிர 4 முறை சிறந்த இசை அமைப்பாளருக்கான மாநில விருது பெற்றுள்ளார்.
தமிழில் குருஷேத்திரம், தூவானம், வர்ணம் உள்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். கன்னடம் மற்றும் இந்தி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். 72 வயதான ஐசக் தாமஸ் முதுமை காரணமாக திரைப்படத்துறையில் இருந்து விலகி தன் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட மரணம் அடைந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.