மற்றுமொரு விளையாட்டு படம் : நம்பர் 6.வாத்தியார் கால்பந்தாட்ட குழு
கபடியை மையமாக வைத்து வெண்ணிலா கபடி குழு படம் உருவானதை போன்று தற்போது கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து நம்பர் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு என்ற படம் உருவாகி வருகிறது. ஐ கிரியேஷன், பி.எஸ்.எஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா படங்களை இயக்கிய செ.ஹரி உத்ரா இயக்குகிறார். நுங்கம்பாக்கம் படத்தில் நடித்த ஐரா, அருவி படத்தில் நடித்த ஷரத் ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். வினோத்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார், அலிமிர்ஸாக் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஹரி உத்ரா கூறியதாவது: இது கால்பந்து விளையாட்டில் நம் இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், அந்த விளையாட்டில் இருக்கிற அரசியலையும் பேசும் படம். படம் முழுக்க முழுக்க இரவிலேயே நடக்கும் கதையாக உருவாகிறது. நிஜமான கால்பந்து விளையாட்டு வீரர்கள் நடிக்கிறார்கள். மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. என்றார்.