வினோத் - லோகேஷ் கனகராஜ் சந்திப்பு
ADDED : 1746 days ago
தமிழ் சினிமாவின் இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள மாஸ் பட இயக்குனர்கள் என்றால் அது லோகேஷ் கனகராஜும், ஹெச்.வினோத்தும் தான். தற்போது அஜித்தின் வலிமை படத்தை வினோத் இயக்கி வருகிறார். விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வெற்றியை ருசித்துவிட்டு, கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கும் பணிகளில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்தநிலையில் தாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைபபடம் ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், தாங்கள் இருவரும் நீண்ட நாட்கள் கழித்து சந்திப்பதாக கூறியிருந்தார்.