நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு
மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் காங்கிரஸ்காரராக இருந்தவர். பின்னர் புதிய கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்து தோல்வியடைந்தார். இந்தநிலையில், சிவாஜியின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.
இந்தநிலையில், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவை சரத்குமார், சீமான் ஆகியோர் சந்தித்ததை அடுத்து டைரக்டர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோரும் சந்தித்தனர். அதையடுத்து தற்போது நடிகர் பிரபுவும் சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், சுதாகரன் இன்னும் 7 மாதங்கள் சிறையில் இருப்பார் என்று தெரிவித்த பிரபு, பாஜகவில் இணைந்துள்ள தனது அண்ணன் ராம்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதோடு நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. சசிகலாவை சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் பிரபு.