ஹாலிவுட் படங்களுக்கு ஆடிசன் கொடுத்த ஜான்வி கபூர்
ADDED : 1684 days ago
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள ரூஹி படம் மார்ச் 11-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ஜான்வி கபூர், தனது ஹாலிவுட் ஆசைகளை வெளிப்படுத்தியவர் இரண்டு ஹாலிவுட் படங்களுக்கு தான் ஆடிசன் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, எல்லைகள் இல்லாத கலைஞர்களின் யோசனையை நான் விரும்புகிறேன். உலகளாவிய நடிகராக இருந்தால் அது உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் வெவ்வேறு கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஒரு அருமையான வழியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.