சீதா அவதாரம் கதை எழுதும் ராஜமவுலியின் தந்தை
ADDED : 1684 days ago
பாகுபலி, பாகுபலி -2, மணிகர்னிகா, மெர்சல் உள்பட பல படங்களுக்கு கதை எழுதியவர் விஜயயேந்திர பிரசாத். பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், தற்போது ராமாயணத்தை மையமாக வைத்து ஒரு பான் இந்தியா படத்திற்கு கதை எழுதி வருகிறார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் இந்த படம் ராமாணயத்தில் வரும் சீதாவின் வாழ்க்கை வரலாறு கதை என்பதால் சீதா அவதாரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அலுகிகா தேசாய் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.