விபச்சார பெண் தாதா வேடத்தில் அலீயா பட் நடிக்கும் கங்குபாய் கத்தியாவாடி!
ADDED : 1681 days ago
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலீயா பட் நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குபாய் கத்தியாவாடி. இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கம் 10 வது திரைப்படம் இது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ( 24.2.2021 ) அன்று கங்குபாய் கத்தியாவாடி திரைப்பட டீஸர் வெளியானது .
எந்தவொரு கலைஞரிடமிருந்தும் சிறந்ததை வெளியே கொண்டு வருவதில் பெயர் பெற்ற பன்சாலி. நடிகை ஆலியா பட்டின் சிறந்த நடிப்பைப் பல்வேறு காட்சிகளில் இந்த படத்தில் பெற்றுள்ளார். விபச்சார பெண் தாதா வேடத்தில் நடித்திருக்கிறார் ஆலியா. இப்படத்தின் பின்னணி இசையை புகழ்ந்து பேச ஆரமித்துவிட்டனர் சினிமா வட்டாரத்தினர். வரும் ஜூலை மாதம் 30 தேதி திரைக்கு வரும் இப்படத்தை பன்சாலி புரொடக்சன்ஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர் .