ஸ்ரேயா வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ
ADDED : 1685 days ago
ஐரோப்பாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோர்சேவ் என்பவருடன் பல வருடங்களாக டேட்டிங் செய்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடர்ந்து வரும் அவர், தனது கணவருடன் சினிமா விழாக்களுக்கும் அவ்வப்போது விசிட் அடிக்கிறார்.
அதோடு சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமான ஜோடிகளாகவும் திகழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது ஆண்ட்ரூவ் கோர்சேவுடன் ஒரு கடற்கரையில் தான் எடுத்துக்கொண்ட ஒரு ரொமான்டிக் போட்டோவை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. அதோடு, குழந்தையாக என்னை உயர்த்துங்கள் ஆண்ட்ரூவ் கோர்சேவ் என்றும் பதிவிட்டுள்ளார்.