இந்த ஆண்டு ஸ்ரத்தா கபூர் திருமணம்?
ADDED : 1731 days ago
பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் நாயகியாக நடித்த பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூரைப்பற்றிய திருமண செய்திகள் கடந்த சில மாதங்களாகவே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, தனது பால்யகால சினேகிதரும், பிரபல பேஷன் போட்டோ கிராபருமான ரோஹன் சிரஸ்தா என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த செய்தியை ஸ்ரத்தா கபூரும் மறுத்ததில்லை. இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரது குடும்ப உறுப்பினர்களும் கலந்து பேசி, இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு ஸ்ரத்தா கபூர்-ரோஹனின் திருணத்தை நடத்த முடிவு செய்திருப்பதாக பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது.