நடிகை ஜமுனாவின் வாழ்க்கை படத்தில் தமன்னா
ADDED : 1721 days ago
மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்து தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ். அவர் அந்த படத்தில் கமிட்டானபோது சாவித்ரி வேடத்தில் இவரா? என்று பலரும் கிண்டலாக பேசினர். ஆனால் அதையெல்லாம் அடித்து நொறுக்கும் வகையில் சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்றார் கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில் இன்னொரு பிரபல நடிகையான ஜமுனாவின் வாழ்க்கையும் படமாக உருவாகப் போகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு தமன்னாவிடம் பேசி வருகிறார்கள். சிவனகு நர்ரா என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.
தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ஜமுனா. குறிப்பாக தமிழில், பணம் படுத்தும் பாடு, மிஸ்ஸியம்மா, நாக தேவதை, தங்கமலை ரகசியம், நல்ல தீர்ப்பு உள்பட 27 படங்களில் நடித்துள்ளார்.