வாரிசுகளுடன் செல்வராகவன் : வைரலான போட்டோ
ADDED : 1725 days ago
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது சாணிக்காயிதம் என்ற படத்தில் கீர்த்தி சுரேசுடன் இணைந்து நடித்து வரும் செல்வராகவன், அதையடுத்து தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கப்போகிறார்.
இந்த நிலையில், செல்வராகவனுக்கு ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், சமீபத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தது. முதன்முறையாக தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் தான் எடுத்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அவை வைரலாகின.