ரம்ஜானுக்கு டாக்டர்
ADDED : 1716 days ago
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள படம் டாக்டர். இப்படம் இம்மாதம் 26ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஏப்., 6ல் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனால் மக்கள் தியேட்டருக்கு வர ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதால் ரிலீஸை தள்ளி வைப்பதாக இருதினங்களுக்கு முன் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் ரம்ஜான் திருநாளில் டாக்டர் வெளியாகும் என நேற்று அறிவித்தனர்.