சினிமாவில் பூஜிதா பிஸி
ADDED : 1716 days ago
பிரபல டிவியில் 'வணக்கம் தமிழா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பூஜிதா. இப்போது சினிமாவில் பிஸியாகி விட்டார். அவர் கூறுகையில், '' 'நவம்பர் ஸ்டோரி' என்கிற வெப்சீரிஸில் மருத்துவ கல்லூரி மாணவியாக நடித்துள்ளேன். இதில் பசுபதி, தமன்னாவும் நடித்துள்ளனர். அடுத்து 'ஜோதி' எனும் த்ரில்லர் படத்திலும் டாக்டராக நடித்துள்ளேன். இதுதவிர கிரைம் த்ரில்லர் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். இப்போதுள்ள காலகட்டத்தில் ஒரு விஷயம் மட்டுமே தெரிந்திருக்காமல் தொகுப்பாளனி, மாடலிங், நடிப்பு என எல்லா துறைகளையும் தெரிந்து கொள்வது நல்லது தானே என்கிறார் பூஜிதா