உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மனோஜ் பாஜ்பாய்க்கு கொரோனா

மனோஜ் பாஜ்பாய்க்கு கொரோனா

பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய். வில்லன் மற்றும் குணசித்ர வேடத்தில் நடித்து வருகிறார். தமிழில் சூர்யாவுடன் அஞ்சான், விஷாலின் சமர் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகளும் வாங்கி இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் மனோஜ் பாஜ்பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மும்பையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக சமீபத்தில் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். பாலிவுட் நட்சத்திரங்களிடையே மீண்டும் கொரோனா அச்சம் தலைதூக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !