இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்
ADDED : 1713 days ago
தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஈ போன்ற முக்கியமான படங்களை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தை இயக்கி வருகிறார்.
லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (மார்ச் 14) காலை 10.07 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 61.
ஜனநாதனுக்கு மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு, மூளை செயலிழந்து விட்டதாக கூறப்பட்டது. ரத்த கசிவை நீக்க டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து வந்தனர். என்றாலும் அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருந்து வந்ததாக கூறப்பட்டது.