பாலிவுட் நடிகையை தட்டித்தூக்கி வந்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சி
ADDED : 1666 days ago
தனது கடை விளம்பர படங்களில் முன்னணி நடிகைகளுடன் மாஸ் காட்டி வந்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சி, தற்போது உல்லாசம், விசில் படங்களை இயக்கிய ஜேடிஜெர்ரி இயக்கும் ஒரு படத்தை ரூ. 30 பட்ஜெட்டில் தயாரித்து, நாயகனாக நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசைய மைக்கிறார். இப்படத்தில் அண்ணாச்சி நடித்துள்ள ஆக்சன் சீன் குறித்த போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் தன்னுடன் நடிப்பதற்கு நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளுக்கு தூது விட்டார் அண்ணாச்சி. ஆனால் யாரும் உடன்பட வில்லை. அதனால் டென்சனானவர், தற்போது கோலிவுட் நடிகைகளே எனக்கு தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு பாலிவுட்டில் இருந்து ஊர்வசி ரவுத்தேலா என்ற நடிகையை தட்டித்தூக்கி வந்து கோலிவுட்டில் இறக்குமதி செய்ய தயாராகி விட்டார். அதையடுத்து கோலிவுட் நடிகைக ளெல்லாம் மிரண்டு போகும் அளவுக்கு பிரமாண்ட செட்டில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாயுடன் தான் ரொமான்ஸ் மற்றும் மாஸ் காட்டும் காட்சிகளை படமாக்குமாறு ஜேடி ஜெர்ரிக்கு ஆர்டர் போட்டுள்ளார் அண்ணாச்சி.