சோசியல் மீடியாவில் வைரலாகும் சிம்பு வீடியோ
ADDED : 1665 days ago
ஈஸ்வரன் படத்தை அடுத்து மாநாடு, பத்துதல படங்களில் நடித்து வரும் சிம்பு, அதையடுத்து மீண்டும் கெளதம்மேனன் இயக்கத்தில் நதிகளிலேயே நீராடும் சூரியன் படத்தில் நடிக்கப்போகிறார்.
மேலும், ஈஸ்வரன் படத்தில் நடிப்பதற்கு முன்பு வெயிட் போட்டிருந்த சிம்புவை பலரும் கிண்டல் செய்து வந்தார்கள். அதனால் அந்த படத்திற்கு முன்பே வெயிட்டை குறைத்து ஸ்லிம்மான சிம்பு, தொடர்ந்து ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து அதே ஸ்லிம் சிம்புவாக காட்சியளித்து வருகிறார்.
அதோடு தற்போது ஜிம் மாஸ்டருடன் இணைந்து தான் ஒர்க்அவுட் செய்யும் ஒரு வீடியோவையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் சிம்பு.