உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அசுரன்' தெலுங்கு ரீமேக்கிலிருந்து வெளியேறிய மணிசர்மா

'அசுரன்' தெலுங்கு ரீமேக்கிலிருந்து வெளியேறிய மணிசர்மா

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'அசுரன்'. இப்படத்தை தெலுங்கில் வெங்கடேஷ், பிரியாமணி மற்றும் பலர் நடிக்க 'நரப்பா' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

படத்திற்கு மணிசர்மா இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், தற்போது திடீரென படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் தனக்கு முழு சுதந்திரம் அளிக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் படத்தின் நாயகன் வெங்கடேஷ் பிறந்தநாளை முன்னிட்டு 'நரப்பா' படத்தின் டீசர் ஒன்றை வெளியிட்டார்கள். அதற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த 'அசுரன்' படத்தின் இசையையே பயன்படுத்தினார்கள். அப்போது முதலே படக்குழுவினருக்கும் மணிசர்மாவுக்கும் மோதல் இருந்து வந்ததாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

மே 14ம் தேதி இப்படம் வெளியாகும் என்று ஏற்கனெவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் பணி பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் வேறு ஒரு இசையமைப்பாளரை வைத்து பணிகளைத் துவங்குவார்கள் எனத் தெரிகிறது. இதனால், வெளியீட்டுத் தேதி தாமதமாகுமா அல்லது அதே தேதியில் வெளியிடுவார்களா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !